படுக்கையறையில் புதுமணத் தம்பதிகள் மரணம்; ஒரே தீயில் தகனம்- நீடிக்கும் மர்மம்

Police spokesman Heart Attack Marriage Death
By Ragavan Jun 04, 2023 04:11 PM GMT
Report

திருமணமான மறுநாளே புதுமணத் தம்பதிகள் படுக்கையறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படுக்கையறையில் புதுமணத் தம்பதிகள் சடலம்

உத்தரபிரதேச மாநிலம் கோடியா பகுதியைச் சேர்ந்த பிரதாப் யாதவ் (24) மற்றும் அவரது மனைவி புஷ்பா யாதவ் (22) ஆகியோர் திருமணமான மறுநாள் காலையில் தங்கள் படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் வியாழக்கிழமை நடந்தது. மாரடைப்பால் இருவரும் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்களின் மரணத்தில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. இதற்கு முன் இதயநோய் இல்லாத இருவர் எப்படி ஒன்றாக மாரடைப்பால் இறந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

படுக்கையறையில் புதுமணத் தம்பதிகள் மரணம்; ஒரே தீயில் தகனம்- நீடிக்கும் மர்மம் | Newly Married Couple Death Mystery DeepensRepresentative purpose only

விரிவான விசாரணை

சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இறந்த தம்பதியரின் உள் உறுப்புகள் ரசாயன ஆய்வுக்கு அனுப்பப்படும் என்றும் பல்ராம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதாப் யாதவுக்கும், புஷ்பாவுக்கும் மே 30 (செவ்வாய்கிழமை) அன்று இரவு திருமணம் நடந்தது. திருமண நிகழ்ச்சி முடிந்து பிரதாப் வீட்டிற்கு சென்றனர். இரண்டு நாள் திருமண விழா காரணமாக இருவரும் சோர்வாக இருந்தனர். அதனால் இருவரும் சீக்கிரம் தூங்கச் சென்றனர். ஆனால், வியாழன் மதியம் அவர்கள் வெளியே வராமல் போனதையடுத்து, சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இதையடுத்து, சம்பவம் குறித்து பொலிஸில் புகார் செய்யப்பட்டது. பொலிஸார் படுக்கையறையை சோதனை செய்தனர். வன்முறை நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். அறையில் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான தடயமும் இல்லை என்றும், உடலில் காயங்களோ, கீறல்களோ எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

ஒரே தீயில் தகனம்

இதற்கிடையில், இருவரின் சடலமும் பிரதாப்பின் கிராமத்தில் ஏராளமான கூட்டங்களுக்கு மத்தியில் ஒரே தீயில் தகனம் செய்யப்பட்டனர். 

படுக்கையறையில் புதுமணத் தம்பதிகள் மரணம்; ஒரே தீயில் தகனம்- நீடிக்கும் மர்மம் | Newly Married Couple Death Mystery Deepens

பிரேதப் பரிசோதனை அறிக்கை

வெள்ளிக்கிழமை அவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில், இருவரின் மரணத்திற்கும் மாரடைப்பு தான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை பொலிஸாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நேரத்தில் அவர்களுக்கு எப்படி மாரடைப்பு ஏற்பட்டது என்பதுதான் சந்தேகம்.

சில பொலிஸ் அதிகாரிகளும் தம்பதியரின் அறையில் காற்றோட்டம் இல்லை என்று கூறியுள்ளனர். லக்னோவில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இருவரின் உள் உறுப்புகளும் ரசாயனப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு பெறப்படும் அறிக்கையிலிருந்து சில முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று பொலிஸார் நம்புகின்றனர். இருவரும் புதன்கிழமை சாப்பிட்ட உணவு என்ன என்றும் விசாரணை நடந்து வருகிறது. தடயவியல் குழு நேற்று தம்பதியின் படுக்கையறையை சோதனை செய்தது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
நன்றி நவிலல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US