திருமணமான ஒரே மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட காதல் தம்பதி
இந்திய மாநிலம் தெலங்கானாவில் காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி, ஒரே மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காதல் திருமணம்
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டின் கொமுரவெல்லியைச் சேர்ந்தவர் டி.வினய். இவரும், 21 வயதான அஞ்சலி என்ற பெண்ணும் ஓர் ஆண்டாக காதலித்துள்ளனர்.

இருவரும் தங்களது காதலை தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்களது சம்மதத்துடன் ஏப்ரல் 9ஆம் திகதி அன்று வினய், அஞ்சலி ஜோடி திருமணம் செய்துகொண்டது.
பின்னர் வினய் கூலி வேலையும், அஞ்சலி தையல்காரராகவும் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
திருமணமான சில நாட்களிலேயே புதுமணத் தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. மனைவி மீது எழுந்த சந்தேகத்தினால் வினய அவருடன் சண்டையிட்டதாக கூறப்பட்டது.
தூக்கிட்டு உயிரிழப்பு
இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஞ்சலி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.
அதன் பின்னர் மனைவி இறந்த செய்தியை அறிந்த வினய், மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவர்களது உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |