திருமணமான 2 மாதத்தில் தாய் வீட்டில் சடலமாக தொங்கிய புதுப்பெண்
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் திருமணமான புதுப்பெண், தனது தாயாரின் வீட்டில் இரண்டு தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுப்பெண்
மகாராஷ்டிராவின் மும்பை நகரைச் சேர்ந்தவர் நேஹா மிஸ்ரா (29). கடந்த 2 மாதங்களுக்கு முன் இவருக்கு, சாண்டாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் தனது தாய் வீட்டிற்கு நேஹா சென்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது தாயார் கோவிலுக்கு சென்றுள்ளார்.
பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பியதும், தனது மகள் தூக்கிட்டு சடலமாக தொங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அதிர்ச்சி சம்பவம்
இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து நேஹாவின் சடலத்தைக் கைப்பற்றினர்.
மேலும், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்ணொருவர் திருமணமான இரண்டே மாதத்தில் தாயின் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |