திருமணமான 3வது நாளில் புதுப்பெண் தற்கொலை
தமிழகத்தில் திருமணமான 3வது நாளில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை ஆவடியை சேர்ந்தவர் உதயா (24). இவருக்கும் அனிதா (26) என்ற பெண்ணிற்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் அனிதாவுக்கு அவரது பெற்றோர்கள் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.
இதனால் உதயா மற்றும் அனிதா கடந்த 6-ந் திகதி சென்னை ராயபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஆவடியில் உள்ள உதயாவின் வீட்டில் மேல் தளத்தில் இருவரும் தனியாக குடிசை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே அனிதாவின் பெற்றோர் அவரை தங்களது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர். இதற்கு உதயாவின் வீட்டார் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அனிதா குடிசை வீட்டுக் கூரையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதுகுறித்து ஆவடி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி 3 நாட்களில் புதுப்பெண் அனிதா தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.