பிரித்தானியாவில் குவாட் பைக் விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு
பிரித்தானியாவின் நியூரி அருகே குவாட் பைக் விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 வயது சிறுவன் உயிரிழப்பு
பிரித்தானியாவின் நியூரி(Newry) அருகே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற குவாட் பைக்(Quad Bike) விபத்தில் 13 வயது சிறுவன் துயரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவமானது கிள்ளேவிக்கு(Killeavy) வெளியே லோ சாலையில்(Low Road ) நடந்துள்ளது.
விபத்தில் சிறுவன் காயமடைந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
மீண்டும் திறக்கப்பட்ட சாலைகள்
விபத்துக்குப் பின்னர், பொலிஸார் விசாரணைக்காக லோ சாலையை தற்காலிகமாக மூடினர்.
விசாரணைக்கு பிறகு சாலை மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
உள்ளூர் SDLP MLA ஜஸ்டின் மெக்நல்டி, இந்த துயரமான செய்தியால் தீவிர வருத்தம் அடைந்ததாகவும். "இந்த ஆண்டின் இந்த நேரத்தில் குறிப்பாக, இந்த பயங்கரமான சம்பவத்தால் நாங்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |