நடிகர் புனித் ராஜ்குமாரின் மரண செய்தியை கேட்டு நேரலையில் கதறி அழுத செய்தி வாசிப்பாளர்! வைரலாகும் வீடியோ
நடிகர் புனித் ராஜ்குமாரின் மரண செய்தியை கேட்டு நேரலையில் செய்தி வாசிக்கும் பெண் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கன்னடாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் புனித் ராஜ்குமார்(46). இவருக்கு என்று சமூகவலைத்தளங்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் அவர் நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த செய்தி ஒட்டு மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் இறந்த தகவல் வெளியானதும் பெங்களூரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் புனீத் ராஜ்குமாரின் தீவிர ரசிகையாக செய்தி வாசிப்பாளர் ஒருவர் அவர் இறந்த செய்தியை படித்து முடித்தவுடன் நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
puneetrajkumar: புனித மரணத்தை கேட்டதும் நேரலையில் அழுத செய்தி வாசிப்பாளர்..#puneetrajkumar pic.twitter.com/g5NC6uWojU
— salan (@salanraj90) October 29, 2021
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அது போல வாரிசு நடிகர் என்கின்ற பிம்பத்தை உடைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார்.
இவரது மரணத்திற்கு தொடர்ந்து அனைத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.