அக்டோபர் 12 முதல்... பிரான்ஸ் செல்லும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
அக்டோபர் மாதம் 12ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) திட்டம் அமுலுக்கு வருவதால் பிரான்ஸ் செல்லும் பிரித்தானியர்கள் இனி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவேண்டியிருக்கும்.
Entry/Exit System (EES) திட்டம்
ரயில் மூலம் பிரான்சுக்குச் செல்லும் பிரித்தானியர்கள், இனி, தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டியிருக்கும்.
அத்துடன், இன்னொரு முக்கிய விடயம், அந்த இயந்திரம், உங்களிடம் போதுமான பணம் உள்ளதா, திரும்ப வருவற்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்துவிட்டீர்களா, பிரான்சில் ஹொட்டல் முன்பதிவு செய்துவிட்டீர்களா, உங்களுக்கு மருத்துவக் காப்பீடு உள்ளதா என்னும் கேள்விகளைக் கேட்கும்.
அதுமட்டுமல்ல, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளில் நீங்கள் விதிகளுக்கு உட்படும் வகையிலான பதிலளிக்கவில்லையென்றால், உதாரணமாக, உங்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை என்றால், நீங்கள் திருப்பி அனுப்பப்படலாம். (பிரித்தானியர்களைப் பொருத்தவரை அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு உண்டு என்பது வேறு விடயம்).
இன்னொரு விடயம், தானியங்கி இயந்திரத்தில் நீங்கள் இவ்வளவு கேள்விகளுக்கு பதிலளித்தும், அதற்குப் பின்னரும் ஒரு அதிகாரி உங்கள் பாஸ்போர்ட்டை பார்வையிட கேட்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, பிரான்சுக்கு பயணிக்கும் பிரித்தானியர்கள், இனி ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிடும். படகில் செல்லும்போதும், விமான நிலையங்களிலும் இதே நிலைதானா என்பது இப்போதைக்கு உறுதியாகத் தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |