கடந்த 24 மணி நேரத்தில்... சுவிட்சர்லாந்தில் கொரோனா தொடர்பில் ஒரு மகிழ்ச்சியான செய்தி
சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
பெடரல் சுகாதார அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த செய்தியின்படி, பல மாதங்களுக்குப் பிறகு கொரோனா தொற்று குறைந்துள்ளது என்றும், கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சுவிட்சர்லாந்தில் புதிதாக 972 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். அதற்கு முந்தைய வாரம் 1,000க்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். ஆனாலும், ஒருவர் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு முந்தைய வாரம் 30 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். முந்தைய வாரத்தில் ஐந்து பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், கடந்த வாரம் மூன்று பேர் பலியாகியுள்ளார்கள்.
பெரியவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி பெற்றுவிட்ட நிலையில், தற்போது அதிகம் கொரோனா தொற்றுக்காளாவது 10 முதல் 19 வயதுடையவர்கள்தான். 100,000 பேருக்கு 130 பேர் அந்த வயதுடையவர்களில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.