Fact Check: உக்ரைன் தலைநகரில் வீடு ஒன்றின் சமையலறைக்குள் ஏவுகணை விழுந்ததாக வெளியான செய்தி
உக்ரைன் தலைநகரில், தங்கள் ஒன்பது பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பம் தங்கள் வீட்டில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, அவர்களுடைய வீட்டின் சமையலறையில் ஏவுகணை ஒன்று விழுந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக அந்தக் குடும்பம் உயிர் தப்பியதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால், அந்த செய்தி முற்றிலும் உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.
முதலில், அந்த ஏவுகணை விழுந்தது உக்ரைன் தலைநகர் Kyivஇல் அல்ல, அது விழுந்தது, Kharkiv நகரில் உள்ள வீடு ஒன்றில்...
அத்துடன், அந்த ஏவுகணை அந்த வீட்டின் சமையலறையில் விழுந்தபோது, அந்த வீட்டின் மற்றொரு அறையில் ஒன்பது பிள்ளைகளையுடய ஒரு குடும்பம் பிரார்த்தனை செய்துகொண்டிருந்ததாக கூறப்படுவதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.
This Russian missile flew into a house near Kyiv in Ukraine where the family with nine children were praying the rosary in their living room. The projectile pierced the ceiling and struck in the kitchen without exploding. Coincidence? No. Providence! pic.twitter.com/mMs7Tpvcqh
— Fr. Ferdinand Santos (@FatherFerdi) March 30, 2022
இந்த தகவலை இந்தியா டுடே பத்திரிகையின் உண்மையறியும் பிரிவு (The India Today Anti-Fake News War room (AFWA) வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை The Sun மற்றும் Daily Mail முதலான பத்திரிகைகளும் புகைப்படம் மற்றும் வீடியோவுடன் வெளியிட்டுள்ள நிலையில், அவையும், அந்த ஏவுகணை விழுந்தது Kharkiv நகரில் உள்ள வீடு ஒன்றில்தான் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.