பிரான்சில் பாரம்பரிய முறைப்படி புத்தாண்டை வரவேற்க கார்களை கொளுத்தி விசித்திர முறையில் கொண்டாட்டம்!
பிரான்சில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சுமார் 874 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஒரு பக்கம் தாக்கி வந்தாலும் உலக மக்கள் புதிய ஆண்டை மிகவும் சந்தோஷாக வரவேற்றனர். வாணவேடிக்கை, வண்ணங்கள் என இரவு முழுவதும் புத்தாண்டு களைகட்டியது. சில நாடுகள் தங்களது பாரம்பரிய முறைப்படி புத்தாண்டை வரவேற்றனர்.
அந்த வகையில் பிரான்ஸ் நாடு சமீப காலமாக கார்களுக்கு தீ வைத்து எரித்து புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக Strasbourg நகரில் வசிக்கும் மக்கள் இந்த பழக்கத்தை தீவிரமாக பின்பற்றி வருகின்றனர்.
இதைத்தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் ஆண்டுதோறும் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் தீயில் எரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் கார்களை எரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் கட்டுப்பாட்டை மீறியும் கடந்த 31ஆம் திகதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் சுமார் 874 கார்களுக்கு தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.