இந்திய இளைஞர் உயிரிழப்பு; 160 ஆண்டுகால குதிரை வண்டி சவாரிக்கு நிரந்தர தடை
newyork bans horse carriages after indian tourists death: இந்திய இளைஞரின் உயிரிழப்பு காரணமாக, நியூயார்க்கில் சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் குதிரை வண்டி சவாரிக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
குதிரையால் இந்திய இளைஞர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயார்க்கில் சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலாக குதிரை வண்டி சவாரி பயன்பாட்டில் உள்ளது.

இந்த குதிரை வண்டி சவாரியை தடை செய்ய அவ்வப்போது விலங்கு நல ஆர்வலர்கள் குரல் எழுப்பி வந்தாலும், இந்திய இளைஞர் ஒருவரின் சமீபத்திய உயிரிழப்பு குதிரை வண்டி தடைக்கு வழிவகுத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 18 வயதான இந்திய இளைஞர் ரோமன்ச் மகாஜன், நியூயார்க் சென்ட்ரல் பூங்காவில் குதிரை கட்டுப்பாடின்றி ஓடியதில் உயிரிழந்துள்ளார்.
நியூயார்க்கில் குதிரை சவாரிக்கு தடை
இதனையடுத்து, குதிரை வண்டி சவாரியை தடை செய்ய தீவிர அழுத்தம் எழுந்த நிலையில், குதிரை வண்டிகளைத் தடைசெய்யும் சட்டத்தை நியூயார்க் நகர மன்றம் நிறைவேற்றியது.
உயிரிழந்த ரோமன்ச் மகாஜன் நினைவாக ரோமன்ச் சட்டம் என அழைக்கப்படும் இந்த சட்டத்தில் மேயர் மம்தானி கையெழுத்திட்டால் 2028 ஆம் ஆண்டு முதல் இந்த தடை அமுலுக்கு வரும்.

இந்த சட்டம் குதிரைகளின் உரிமையாளர்கள் அவற்றை இறைச்சிக்காகவோ அல்லது மற்ற குதிரை வண்டி வணிக நோக்கங்களுக்காகவோ விற்க அனுமதிக்கப்பட மாட்டாது.
இந்த சட்டத்திற்கு நியூயார்க் மேயர் மம்தானி தெரிவித்தாலும், இதனால் வேலை இழப்பை எதிர்கொள்ள உள்ள குதிரை உரிமையாளர்களின் நிலை குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
செயல்பட்டு வரும் சுமார் 150 குதிரை வண்டி ஓட்டுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளைக் கண்டறிய உதவுவதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் எனவும், உரிமையாளர்களுக்கான சாத்தியமான இழப்பீட்டை ஆராய்வதற்கான ஒரு விதிமுறை மசோதாவில் உள்ளது எனவும் நகர மன்ற சபாநாயகர் ஜூலி மெனின் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம், இந்த தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளது.