பேட்டிங்கில் சொதப்பிய ஆப்கானிஸ்தான்... நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற சொற்ப இலக்கு நிர்ணயம்
நியூசிலாந்து டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற 125 ரன்களை இலக்காக ஆப்கானிஸ்தான் நிர்ணயித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றிப்பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறும்.
ஒருவேளை ஆப்கானிஸ்தான் வெற்றிப்பெற்றால், இந்தியா-நமீபியா போட்டியின் முடிவை பொறுத்து எந்த அணி அரையிறுதிக்கு தகுதிப்பெறும் என்பது தெரியவரும்.
இன்று அபுதாபியில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.
ஹஸ்ரத்துல்லா ஜசாய் (2), முகமது ஷாஜாய் (4), ரஹ்மானுல்லா குர்பாஸ் (6), நஜிபுல்லா சத்ரான்(73), குல்பாடின் நைப் (15), முகமது நபி (14), கரீம் ஜனத் (2), ரஷீத் கான் (3) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து தரப்பில் பந்து வீச்சில் போல்ட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். சவுதி 2 விககெட்டுகளையும், நீஷம், சோதி, Milne தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.