இந்த தடவையாவது ஜெயிக்குமா? இந்திய சுற்றுப்பயணத்திற்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு... நட்சத்திர வீரர் விலகல்
இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 17ம் திகதி தொடங்குகிறது. வேகப்பந்து வீச்சாளர் போல்ட் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இருந்து விலகி உள்ளார்.
சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரின் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா மோசமாக தோற்றது நினைவுக்கூரத்தக்கது.
இந்திய சுற்றுப்பயணத்துக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்
நியூசிலாந்து டெஸ்ட் அணி
வில்லியம்சன் (கேப்டன்), ஹென்றி நிக்கோலஸ், ரோஸ் டெய்லர், டாம் ப்ளன்டெல், டெவோன் கன்வே, ஜேமிசன், அஜஸ் பட்டேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், வில் சோமர் வில்லே, டிம் சவுத்தி, வில்யங், நீல்வாக்னர், டாம் லாதம்.
நியூசிலாந்து டி20 அணி
வில்லியம்சன் (கேப்டன்), டோட் ஆஸ்டில், ட்ரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மார்ட்டின் கப்டில், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சீஃபர்ட், இஷ் சோதி மற்றும் டிம் சவுதி.