உலகக்கோப்பையை இந்த அணியே வெல்லும்! முதல் முறையாக வெளிப்படையாக கூறிய கங்குலி
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ-ன் தலைவருமான கங்குலி டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என்று தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று உலகக்கோப்பை டி20 தொடரின் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.
இதில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த இரு அணிகளில் எந்த அணி, உலகக்கோப்பையை கைப்பற்றும் என்று முன்னணி வீரர்கள் பலர் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ-யின் தலைவருமான கங்குலி, நியூசிலாந்து அணி டி20 உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நியூசிலாந்து அணி சமீபகாலமாக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இது நியூசிலாந்து அணிக்கான காலம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நியூசிலாந்து அணி, இந்திய அணியை வீழ்த்திய டெஸ்ட் சாம்பியன்சிப் கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியா அணியும் வலுவானது தான், இருப்பினும் தன்னை பொறுத்தவரையில் நியூசிலாந்து அணிக்கு வாய்ப்பு கூடுதலாக உள்ளது என்று கூறியுள்ளார்.