இப்போவும் சொல்றேன்...நியூசிலாந்து தான் ஜெயிப்பாங்க! இந்தியாவுக்கு வாய்ப்பேயில்லை: அடித்து சொல்லும் வாகன்
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன், இந்திய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுப் போட்டியில் நியூசிலாந்து தான் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பின் இறுதிப் போட்டி வரும் 18-ஆம் திகதி இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டிக்கு முன் எந்த ஒரு பயிற்சி ஆட்டமும் இல்லாததால், இந்திய அணி தங்களுக்குள்ளே இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடியது.
அதில் ஒரு அணிக்குகோஹ்லியும், மற்றொரு அணிக்கு கே.எல்.ராகுலும் கேப்டனாக இருந்தனர். இதில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர்.
A good Day 1 at office for #TeamIndia at the intra-squad match simulation ahead of #WTC21 Final ? pic.twitter.com/TFb06126fr
— BCCI (@BCCI) June 12, 2021
குறிப்பாக ரிஷப் பாண்ட் சதம் அடித்ததுடன், கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெளியேறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியிருந்தது. இதனால் இந்திய ஒரு நல்ல மனநிலையிலே உள்ளது என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன்,இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சிப் போட்டியில் நன்றாகத்தான் விளையாடுகிறார்கள். ஆனால் அதே போல அவர்களால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட முடியாது.
இப்போதும் நியூசிலாந்து அணிக்கு தான் இந்த இறுதிப் போட்டியில் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருப்பது அவர்களுக்கு மனரீதியாக அதிக பலத்தை கொடுத்திருக்கிறது எனவே இந்த உத்வேகத்தை அவர்கள் இந்திய அணிக்கெதிரான இந்த இறுதிப்போட்டியில் தொடர்வார்கள் என்று கூறியுள்ளார்.