இந்தியாவுக்கே வாய்ப்பேயில்லை... நியூசிலாந்துக்கு அசால்ட்டாக ஜெயிச்சுடுவாங்க: அடித்து கூறும் ஸ்காட் ஸ்டைரிஸ்
நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் ஸ்டைரில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து வெற்றி பெற்றுவிடும் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் வரும் 18-ஆம் திகதி இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டி சவுத்தாம்டனில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்? என்பது குறித்து பல முன்னணி வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ், என்னை பொறுத்தவரையில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தும் என கருதுகிறேன்.
இறுதி அதிக ரன்கள் குவித்த வீரராக நியூசிலாந்து அணியின் டீவன் கான்வே இருப்பார் என நம்புகிறேன், அதே போல் டிரண்ட் பவுல்ட் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இருப்பார் என்று இப்படி துல்லியமாக கூறியுள்ளார்.