உலக டெஸ்ட் போட்டிக்கான கோப்பை எங்களுக்கு தான்! இந்தியாவுக்கு சவால்விட்ட நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்
இந்திய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டியில், நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரண்ட் போல்ட் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் வரும் ஜுன் மாதம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுகிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டிரண்ட் போல்ட் கூறுகையில், நியூசிலாந்து அணி சொந்த மண்ணிலும் சரி, உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் சரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இதை வைத்து பார்க்கும் போது இம்முறை இந்திய அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்ற எங்களுக்கு அருமையான வாய்ப்பு உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நாங்கள் வரலாறு படைப்போம்.
இந்த இறுதிப் போட்டியில் பங்கேற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த தொடர் முடிந்து ஐபிஎல் தொடரிலும் நான் சில ஆட்டங்களில் வாய்ப்பு கிடைத்தால் விளையாட காத்திருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.