பிரித்தானிய இளவரசி கேட் தொடர்பில் அடுத்த சர்ச்சை தொடங்கியது
பிரித்தானிய இளவரசி கேட் அன்னையர் தினத்தன்று வெளியிட்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என தெரியவந்ததால் பெரும் சர்ச்சை எழுந்தது.
அந்த சர்ச்சை அடங்குவதற்குள், இன்னொரு புகைப்படம் தொடர்பில் புதிதாக ஒரு சர்ச்சை துவங்கியுள்ளது.
இளவரசி கேட் புகைப்படத்தால் சர்ச்சை
பிரித்தானிய இளவரசி கேட், அறுவை சிகிச்சைக்குப் பின் வெளியே தலைகாட்டாமல் இருந்ததால் பரவத்துவங்கிய வதந்திகளைப் பொய்யாக்கும் வகையில், அன்னையர் தினத்தன்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் அவர்.
ஆனால், அந்த புகைப்படத்தில் அவரது கையில் திருமண மோதிரம் இல்லை என்பது முதலான சந்தேகத்தை உருவாக்கும் பல விடயங்கள் இருந்தன. பின்னர் அவர் வெளியிட்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என தெரியவந்ததால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதற்காக இளவரசி கேட் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
அடுத்த சர்ச்சை தொடங்கியது
இந்நிலையில், திங்கட்கிழமையன்று, தன் கணவரான இளவரசர் வில்லியமுடன் இளவரசி கேட் காரில் பயணிக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
Yall!? Has no one else noticed that the most recent photo of #KateMiddleton in the car… the bricks in the car windows, don’t appear to match the bricks outside the car…
— Indomitable (@NdomitableNegro) March 12, 2024
Is this another photoshopped picture… can anyone find the original they clipped it from? #KateGate WTF?! pic.twitter.com/D730OsfJCI
இணையவாசிகள் அந்த புகைப்படத்தில் காணப்படும் காருக்கு ஆறு சக்கரங்கள் இருப்பதை சுட்டிக் காட்டி, இதுவும் Photoshop செய்யப்பட்ட புகைப்படமா என சந்தேகம் எழுப்பியுள்ளார்கள்.
மேலும், கார் கண்ணாடி வழியாக தெரியும் செங்கற்சுவருக்கும், வெளியே இருக்கும் செங்கற்சுவருக்கும் வித்தியாசம் உள்ளதாக ஒருவர் கூற, வில்லியம் முகம் மட்டும் தெளிவாக உள்ளது, கேட் முகம் ஏன் மங்கலாக உள்ளது என ஒருவரும், எப்போதுமே இளவரசி கேட் புகைப்படம் எடுக்கும்போது முகத்தை மறைக்கமாட்டார், ஆக, அந்த புகைப்படத்திலிருப்பது கேட் அல்ல, அது வில்லியமுடைய ரகசிய காதலியான Rose Hanbury என்று ஒருவரும் விமர்சிக்க, புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் கோபத்தில் கொந்தளிக்கிறார்.
It is rather odd that that the car in yesterday's picture of Catherine, Princess of Wales, otherwise known as Kate Middleton, has 6 wheels - 2 of which seem discombobulated. pic.twitter.com/4Co4cbOiu8
— David Kurten (@davidkurten) March 5, 2024
நாங்கள் எடுக்கும் புகைப்படத்தில் வெளிச்சம் குறைவாக இருக்கும் பட்சத்தில், வெளிச்சத்தை மட்டும் அதிகரிப்போமேயொழிய, Photoshop எல்லாம் செய்யமாட்டோம் என்று கூறியுள்ளார் அந்த புகைப்படத்தை எடுத்த Jim Bennett என்பவர்.
That is not Kate Middleton in the car; Kate has never shied away from cameras. Even when she waited ten years for Willy to Propose, that is Rose Hanbury, William's mistress. #KateGate #KateMiddleton #PrinceWilliamIsALiar https://t.co/aoLap9LxIk pic.twitter.com/wPT57FrVx2
— Az (@Az79923807) March 11, 2024
நான் காரில் வில்லியம் இருப்பதைப் பார்த்து, அந்தக் காரை புகைப்படம் எடுத்தேன். புகைப்படத்தை பார்த்த பின்புதான் நானே கவனித்தேன், அந்தக் காருக்குள் இளவரசி கேட்டும் இருக்கிறார் என்பதை. அதனால்தான் இளவரசர் வில்லியம் முகம் தெளிவாகவும், இளவரசி கேட் முகம் மங்கலாகவும் உள்ளது என்று விளக்கமும் அளித்துள்ளார் Jim Bennett.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |