அடுத்த எலோன் மஸ்க்... இளம் வயதில் ரூ 6.37 லட்சம் கோடி AI சாம்ராஜ்யம் உருவாக்கி அசத்தல்
Scale AI நிறுவனத்தின் சக நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Alexandr Wang என்பவரை புதிய எலோன் மஸ்காக உருவாகி வருவதாகவே தொழில்நுட்ப உலகில் அடையாளப்படுத்தப்படுகிறார்.
வாங் கைப்பற்றிய வளர்ச்சி
கடந்த 2016ல் Scale AI நிறுவனத்தை Alexandr Wang தொடங்கியுள்ளார். வணிக நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மூலத் தரவை மதிப்புமிக்க நுண்ணறிவுகளாக மாற்றுவதே இந்த நிறுவனத்தின் வேலை.
ஆனால் குறுகிய காலத்தில் அலெக்சாண்டர் வாங் கைப்பற்றிய வளர்ச்சி என்பது டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்குடன் ஒப்பிடும் அளவுக்கு உச்சம் கண்டது. லாஸ் அலமோஸ் பகுதியில் 1997 ஜனவரி மாதம் பிறந்த அலெக்சாண்டர் வாங் அறிவார்ந்த சூழலில் வளர்ந்தார்.
அவரது பெற்றோர் அணுகுண்டு உருவாக்கப் பயன்படுத்தப்படும் லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தில் இயற்பியலாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்த பின்னணி கற்றல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான அவரது ஆர்வத்தை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியது.
மட்டுமின்றி வாங் ஒரு பன்மொழிப் புலமை கொண்டவர். மாண்டரின், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர், மேலும் புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவரது ஆர்வம் அவரை 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணப்பட வைத்தது.
சுயமாக உருவான
வாழ்க்கை மற்றும் வணிகம் குறித்த பரந்த மற்றும் வளமான கண்ணோட்டத்தை அவருக்கு அது அளித்துள்ளது. 17 வயதில் பல இளைஞர்கள் கல்லூரி படிப்புக்கு தயாராகும் போது, வாங் Addepar நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார்.
அங்கிருந்து பின்னர் அவர் Quoraவில் சேர்ந்தார். அத்துடன் MIT-ல் கணிதம் மற்றும் கணினி அறிவியல் படிப்பில் இணைந்தார். 19வது வயதில் துணிச்சலான முடிவாக Scale AI நிறுவனத்தை தொடங்கினார்.
Scale AI நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 7.3 பில்லியன் டொலர்கள் என்றே கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தில் அவருக்கிருந்த 15 சதவிகித பங்குகளால் அவரின் 25 வயதிலேயே சுயமாக உருவான பெரும் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்த்தை அடைந்தார்.
Scale AI நிறுவனத்தின் வளர்ச்சியால் ஈர்க்கபப்ட்டு அமெரிக்க விமானப்படை மற்றும் இராணுவத்தில் இருந்து சுமார் ரூ 858 கோடிககான ஒப்பந்தம் மேற்கொள்ளவும் வாய்ப்பமைந்தது.
2018 மற்றும் 2021ல் 30 வயதுக்குட்பட்ட பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றார். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், தற்போதைய அவரது சொத்து மதிப்பு 200 கோடி அமெரிக்க டொலர் என்றே தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |