கே.எல்.ராகுலுக்கு காத்திருந்த அடுத்த சோதனை - சோகத்தில் ரசிகர்கள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசிய இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியடைந்து 2-0 என தொடரை இழந்த இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்து தொடரை முழுவதுமாக இழந்தது.
இதனிடையே இந்த போட்டியில், மெதுவாக பந்து வீசியதாக இந்திய அணிக்கு மேட்ச் ஊதியத்தில் 40% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மெலும் விளையாடிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தாமதமான ஒவ்வொரு ஓவருக்கும் போட்டிக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படவுள்ளது.
அதேசமயம் கள நடுவர்கள் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் பொங்கனி ஜெலே, மூன்றாவது நடுவர் அல்லாஹுதின் பலேகர் மற்றும் நான்காவது நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் ஆகியோரின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் இந்த அபராதத்தை இந்திய அணிக்கு விதித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் இதை ஒப்புக்கொண்டதால் ஐசிசி விசாரணை தேவையில்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணி ஓவர்ரேட் விதிகளை மீறுவது இது இரண்டாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.