அடுத்த மிஸ் இங்கிலாந்து அழகி என எதிர்பார்க்கப்பட்ட இளம்பெண் போட்டியிலிருந்து விலகல்: காரணம் என்ன தெரியுமா?
மிஸ் இங்கிலாந்து அழகிப்போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு இளம்பெண், போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
அடுத்த மிஸ் இங்கிலாந்து அழகி என எதிர்பார்க்கப்பட்ட இளம்பெண்
லண்டனைச் சேர்ந்த நடாஷா (Natasha Beresford, 26), உலகின் மேக் அப் அணியாத அழகிப்போட்டியில் வென்ற முதல் பெண் ஆவார்.
மிஸ் லண்டன் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், மே மாதம் Wolverhamptonஇல் நடைபெற உள்ள மிஸ் இங்கிலாந்து அழகிப்போட்டியின் இறுதிப்போட்டியில் பங்கேற்க இருந்தார். அவர் மிஸ் இங்கிலாந்து அழகியாக நிச்சயம் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் ஆவார்.
Image: Lauren Cremer, FabUK / SWNS
ஆனால், தான் அந்தப் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என தற்போது அறிவித்துள்ளார் நடாஷா.
காரணம் என்ன?
நடாஷா போட்டியிலிருந்து விலக என்ன காரணம் என்றால், மிஸ் இங்கிலாந்து அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற உள்ள மே மாதத்தின் அதே வார இறுதியில் அவரது நெருங்கிய தோழியின் திருமணம் நடைபெற உள்ளதாம்.
Image: @GEMxFoto / SWNS
தான் தன் தோழியின் திருமணத்தில், மணமகளின் தோழியாக அவருடன் நடைபயிலப்போவதாக ஏற்கனவே அவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டதாகவும், ஆகவே தன்னால் அழகிப்போட்டியில் கலந்துகொள்ளமுடியாது என்றும் கூறியுள்ளார் நடாஷா.
நடாஷாவுக்கு பதிலாக மிஸ் லண்டன் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த Temi Adeyemi (26) என்னும் இளம்பெண் தற்போது மிஸ் இங்கிலாந்து அழகிப்போட்டியின் இறுதிப்போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.
Image: Lauren Cremer, FabUK / SWNS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |