பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம்? ஆதரவை குவிக்கும் ரிஷி சுனக், போரிஸ் ஜோன்சன்: முந்துவது யார்?
மீண்டும் போரிஸ் ஜோன்சனை பிரதமராக கொண்டுவருவது தற்கொலைக்கு சமம் என்றே ஒருசாரார்
ரிஷி சுனக் பிரதமராக வரவேண்டும் என இதுவரை கன்சர்வேட்டிவ் கட்சியின் 86 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படை
பிரதமர் பொறுப்பில் இருந்து லிஸ் ட்ரஸ் பதவி விலகிய நிலையில், நாட்டின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் மீண்டும் மின்னலாக ஆதரவை திரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இவருக்கு கடும் போட்டியாக முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் களமிறங்குவார் என்றே நம்பப்படுகிறது. தமது நெருக்கமானவாளர்களிடம், ஆதரவு திரட்ட போரிஸ் ஜோன்சன் குறுந்தகவல் அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
@reuters
ஆனால், மீண்டும் போரிஸ் ஜோன்சனை பிரதமராக கொண்டுவருவது தற்கொலைக்கு சமம் என்றே ஒருசாரார் குறிப்பிடுகின்றனர். இதனிடையே, வெள்ளிக்கிழமையே 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ரிஷி சுனக் நெருங்கிவிட்டதாக தகவல் கசிந்துள்ள நிலையில், போரிஸ் ஜோன்சனுக்கு இன்னும் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிஷி சுனக் பிரதமராக வரவேண்டும் என இதுவரை கன்சர்வேட்டிவ் கட்சியின் 86 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். ஆனால் 54 உறுப்பினர்கள் மட்டுமே போரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மூன்றாவதாக களத்தில் இருக்கும் பென்னி என்பவருக்கு 22 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். போட்டியில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளரும் குறைந்தபட்சம் 100 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, திங்கட்கிழமை மதியம் உள்ளூர் நேரப்படி 2 மணிக்கு முன்னர் வாக்கெடுப்புக்கு தயாராக வேண்டும்.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் போரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக 4 அமைச்சர்கள் களமிறங்கினர். ஜேக்கப் ரீஸ்-மோக், சைமன் கிளார்க், அலோக் ஷர்மா மற்றும் பென் வாலஸ் ஆகிய நால்வரும் முதன்முதலாக ஆதரவு அறிவித்தனர்.
@Downing Street
சுனக் அப்போது களத்தில் இல்லை என்றும், அதன் பின்னரே ஒரேயடியாக 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் ரிஷி சுனக் தாம் போட்டியில் இருப்பதாக அறிவித்தார்.
ஆனால் திங்கட்கிழமை மதியத்திற்கு முன்னர் போரிஸ் ஜோன்சன் 100 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவார் என்றே அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.