அதிர்ச்சி தோல்வியால் கண்ணீருடன் ஓய்வை அறிவித்த நெய்மர்
பிரேசில் கால்பந்து நட்சத்திரமான நெய்மர் ஓய்வு அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நெய்மர் ஓய்வு
FIFA உலகக்கிண்ண கால்பந்து தொடரின் Round of 16 சுற்றில், நோர்வே அணியிடம் 2-1 என்ற கணக்கில் பிரேசில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
இதனைத் தொடர்ந்து, பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
தோல்வியால் மனமுடைந்து அழுத நெய்மர் (Neymar), "நான் முயன்றேன். நான் முயன்றேன். இந்த Met Life மைதானத்தில் தொடங்கிய பயணத்தை இங்கேயே முடிக்கிறேன். இப்போது அது முடிவுக்கு வந்துவிட்டது" என்றார்.
சாதனையாளர்
34 வயதாகும் நெய்மரின் இந்த முடிவு கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நெய்மர் பிரேசில் அணிக்காக 130 போட்டிகளில் பங்கேற்று 80 கோல்கள் அடித்துள்ளார். பிரேசிலுக்காக அதிக கோல்கள் அடித்த சாதனையாளரும் இவர்தான்.
மேலும், தேசிய அளவில் அதிக கோல் வாய்ப்புகள் (59) மற்றும் பிரேசில் வரலாற்றில் அதிக கோல் பங்களிப்புகள் (139) அளித்துவரும் நெய்மர்தான்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |