மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர்: நெய்மரால் வருத்தத்தில் ரசிகர்கள்
எஸ்டேக்லல் அணிக்கு எதிரான போட்டியில் நெய்மர் மீண்டும் காயமடைந்தார்.
ஹாட்ரிக் கோல்
AFC சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அல் ஹிலால் மற்றும் எஸ்டேக்லல் அணிகள் மோதின. நீண்ட இடைவெளிக்கு பின் நட்சத்திர வீரர் நெய்மர் அல் ஹிலால் அணியில் களமிறங்கினார்.
இப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட அலெக்ஸாண்டர் மிட்ரோவிக் ஹாட்ரிக் கோல் அடிக்க, அல் ஹிலால் (Al - Hilal) அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக நெய்மர் காயமுற்றார். அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.
தசைப்பிடிப்பு
போட்டிக்கு பின்னர் பேசிய நெய்மர் (Neymar) கூறுகையில், "நான் ஒரு தசைப்பிடிப்பு போல் உணர்ந்தேன், ஆனால் மிகவும் வலிமையாக இருக்கிறேன்! நான் தேர்வுகளில் ஈடுபடுவேன் மற்றும் அதில் ஒன்றும் இல்லை என்று நம்புகிறேன். ஒரு வருடம் கழித்து இது நடப்பது இயல்பானது. மருத்துவர்கள் ஏற்கனவே என்னை எச்சரித்திருந்தனர். அதனால்தான் நான் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் விளையாடுவதற்கு அதிக நிமிடங்கள் இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
முதற்கட்ட தகவல்களின்படி, நெய்மரின் தொடை தசையில் பிடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, காயத்தால் ஓய்வில் இருந்து மீண்டும் விளையாட வந்த நெய்மர் மறுபடியும் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டது ரசிகர்களை கவலையுற செய்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |