கால்பந்து உலகில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட 10 நட்சத்திரங்கள்
சுமார் ரூ.800 கோடி தொகைக்கு PSG அணியில் இருந்து சவுதி அரேபியாவின் அல் ஹிலால் அணிக்கு நெய்மர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கால்பந்து நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய அணிகளின் உச்ச நட்சத்திரங்கள்
கால்பந்து உலகை ஐரோப்பிய அணிகள் ஆட்சி செய்துவரும் நிலையில், தற்போது சவுதி அரேபியா அணிகளுக்கு ஐரோப்பிய அணிகளின் உச்ச நட்சத்திரங்கள் பலர் படையெடுத்துள்ளனர்.
@getty
இந்த நிலையில் இதுவரை அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கால்பந்து உச்ச நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. பிரேசில் கால்பந்து உலகின் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான நெய்மர் 2017ல் PSG அணிக்காக ஒப்பந்தம் செய்யப்படும் போது 222 மில்லியன் யூரோ என கூறப்பட்டது.
தற்போது அவர் அல் ஹிலால் அணிக்காக 800 கோடி ரூபாய் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். PSG அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய கைலியன் எம்பாப்பே 2018ல் ஒப்பந்தம் செய்யப்படும் போது 180 மில்லியன் யூரோ தொகையை கைப்பற்றினார்.
தற்போது அவர் PSG அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். ஈக்வடார் நாட்டவரான Moises Caicedo இங்கிலாந்தின் Chelsea அணிக்காக 133 மில்லியன் யூரோ தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
போர்த்துகல் வீரர் Joao Felix ஸ்பெயின் அணிக்காக 2019ல் ஒப்பந்தம் செய்யப்படும் போது 126 மில்லியன் யூரோ தொகை என கூறப்பட்டது. இங்கிலாந்து வீரர் Declan Rice தற்போது அர்செனல் அணிக்காக 122 மில்லியன் யூரோ தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
@getty
அர்ஜென்டினாவின் Enzo Fernandez இங்கிலாந்தின் Chelsea அணிக்காக 121 மில்லியன் யூரோ தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரேசில் வீரர் Philippe Coutinho கடந்த 2018ல் 120 மில்லியன் யூரோ தொகைக்கு பார்சிலோனா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
பிரான்ஸ் வீரர் Antoine Griezmann கடந்த 2019ல் 120 மில்லியன் யூரோ தொகைக்கு பார்சிலோனா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இங்கிலாந்து வீரர் Jack Grealish கடந்த 2021ல் மன்செஸ்டர் சிட்டி அணிக்காக 117 மில்லியன் யூரோ தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
பெல்ஜியம் வீரர் Eden Hazard கடந்த 2019ல் ரியல் மாட்ரிட் அணிக்காக 115 மில்லியன் யூரோ தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |