கால்பந்து ஜாம்பவான் பீலேவின் இமாலய சாதனையை முறியடித்த நெய்மர்! நான் அவரைவிட சிறந்தவன் இல்லை என உருக்கம்
உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் பொலிவியாவுக்கு எதிராக நெய்மர் 2 கோல்கள் அடித்ததன் மூலம் ஜாம்பவான் பீலேவின் சாதனையை முறியடித்தார்.
பீலேவின் சாதனை முறியடிப்பு
Mangueirão மைதானத்தில் நடந்த போட்டியில் பிரேசில் அணி 5-1 என்ற கோல் கணக்கில் பொலிவியா அணியை வீழ்த்தியது.
நட்சத்திர வீரர் நெய்மர் 2 கோல்கள் அடித்தார். இதன்மூலம் அவர் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் இமாலய சாதனையை முறியடித்தார்.
அதாவது தேசிய அணிக்காக பீலே 77 கோல்கள் அடித்திருந்த நிலையில், நெய்மர் தற்போது 79 கோல்கள் அடித்துள்ளார்.
நெய்மர் உருக்கம்
சாதனை குறித்து அவர் கூறுகையில், 'நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு வார்த்தைகள் இல்லை. நான் இந்த சாதனையை எட்டுவேன் என்று நினைக்கவே இல்லை.
இந்த சாதனை மூலம் நான் அவரை விட (பீலே) சிறந்த வீரர் என்றோ அல்லது எந்த ஒரு தேசிய அணியின் வீரரை விடவோ சிறந்தவன் என்று அர்த்தம் ஆகாது. நான் எப்போதும் தேசிய அணியில் என் கதையை எழுத விரும்பினேன், அதை இன்று (நேற்று) நான் செய்தேன்' என தெரிவித்தார்.
Pic: GUILHERME DIONIZIO/AE. SP
AP Photo/Bruna Prado
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |