மோசமாக நடந்துகொண்ட நெய்மர்! சிவப்பு அட்டை கொடுத்து பாதியிலேயே வெளியேற்றிய நடுவர்..ரசிகர்கள் அதிர்ச்சி
ஸ்ட்ராஸ்பர்க் அணிக்கு எதிரான போட்டியில் பாரிஸ் ஜெயிண்ட் ஜேர்மைன் அணி வீரர் நெய்மர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு, பாதி ஆட்டத்திலேயே வெளியேற்றப்பட்டார்.
சுயகோல் அடித்த கேப்டன்
பாரிஸின் பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நடந்து வரும் போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் - ஸ்ட்ராஸ்பர்க் அணிகள் மோதி வருகின்றன.
உலகக்கோப்பைக்கு பின்னர் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் மற்றும் தங்க காலணி வென்ற எம்பாப்பே ஆகிய இருவரும் பி.எஸ்.ஜி அணிக்காக களமிறங்கினர்.
முதல் பாதியில் பி.எஸ்.ஜி அணியின் கேப்டன் மார்குபின்ஹோஸ் ஒரு கோல் (14வது நிமிடம்) அடித்தார். அதன் பின்னர் இரண்டாம் பாதியின் 51வது நிமிடத்தில் அவரே சுயகோல் அடித்ததால், ஸ்ட்ராஸ்பர்க் அணிக்கு ஒரு கோல் கிடைத்தது.
நெய்மர் வெளியேற்றம்
இந்த நிலையில் எதிரணி வீரரை தாக்கியதற்காக நெய்மருக்கு மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பின்னர் 62வது நிமிடத்தில் எதிரணி வீரரின் கால் பட்டது போல் நெய்மர் கீழே விழுந்து வலியால் துடிப்பது போல் நடித்தார்.
Excellent refereeing. A clear dive from Neymar and a second yellow card.pic.twitter.com/Yb9XnwaFAm
— Parted Beard (@PartedBeard) December 28, 2022
இதனால் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்ற நெய்மர், விதியை மீறியதாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு உடனடியாக போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். ஒரு கோல் கூட அடிக்காத நெய்மர் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
@AFP
@IMAGO/HMB-Media/Joaquim Ferreira