உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்த நெய்மார்: உற்சாகத்தில் ரசிகர்கள்
பிரேசில் கால்பந்து நட்சத்திரமான நெய்மார் உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்துள்ளார்.
நெய்மார்
கால்பந்து உலகில் ரொனால்டோ, மெஸ்ஸிக்கு அடுத்த இடத்தில் உலகளவில் பிரபலமான வீரராக இருப்பவர் நெய்மார்.

பிரேசிலைச் சேர்ந்த நெய்மார் (Neymar) உலகக்கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாட காயங்கள் தடையாக இருந்தன.
இதன் காரணமாக உலகக்கிண்ண தொடரில் நெய்மார் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், தொடர் காயங்கள் காரணமாக ஏற்பட்ட நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெய்மார் தற்போது அணிக்கு திரும்புகிறார்.
ஐந்து முறை சாம்பியன்
அதாவது, அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத்திற்கான பிரேசில் அணியில் நெய்மார் இடம்பிடித்துள்ளார் என்று அணியின் மேலாளர் கார்லோ அன்செலோட்டி திங்களன்று தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "நாங்கள் ஆண்டு முழுவதும் நெய்மாரை உன்னிப்பாக கண்காணித்து வந்தோம். சமீபகாலமாக அவர் சீராக விளையாடி வருவதையும், அவரது உடல் தகுதி மேம்பட்டுள்ளதையும் நாங்கள் கவனித்தோம்" என்றார்.
இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரேசில் அணி, 6வது கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளதால், நெய்மார் இடம்பிடித்துள்ளது உறுதியாகியுள்ளதால் கூடுதல் பலத்தை அணிக்கு கொடுத்துள்ளது.
34 வயதாகும் நெய்மார் பிரேசிலின் வரலாற்றிலேயே அதிக கோல்கள் அடித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |