நினைக்காத விடயங்களை சாதித்தேன்! உலகக்கோப்பையில் மிரட்டும் நெய்மர்
இந்த உலகக்கோப்பையில் முன்னேற வேண்டிய நேரமிது என பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார்.
காலிறுதியில் பிரேசில்
கத்தார் உலகக்கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறியுள்ள பிரேசில் அணி 9ஆம் திகதி குரேஷியா அணியை எதிர்கொள்கிறது.
சூப்பர் 16 சுற்றில் தென் கொரியாவை எதிர்கொண்ட பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் காயத்தில் இருந்து மீண்டு வந்த நட்சத்திர வீரர் நெய்மர் பெனால்டி வாய்ப்பில் அபாரமாக கோல் அடித்தார்.
இதன்மூலம் மூன்று உலகக்கோப்பைகளில் கோல் அடித்த பீலே மற்றும் ரொனால்டோ ஆகியோரின் சாதனையுடன் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
முன்னேற வேண்டிய நேரம்
இந்த நிலையில் தனது சாதனை குறித்து நெய்மர் கூறுகையில், 'நிச்சயமாக இந்த தொடரில் நாங்கள் மேலும் முன்னேற வேண்டிய நேரம் இது. வெளிப்படையாகவே நாங்கள் உலகக்கோப்பை குறித்து கனவு காண்கிறோம். ஆனால் படிப்படியாக செல்ல வேண்டும்.
@AP Photo/Martin Meissner
நாங்கள் நன்றாக தயாராகி கோப்பையை வெல்வதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். சாதனைகளை முறியடிப்பது எனக்கு ஒரு பெரிய பெருமை. நான் நினைக்காத சில விடயங்களை சாதித்தேன். அதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
30 வயதாகும் நெய்மர் பிரேசில் அணிக்காக 76 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.