இனி என்ன நடக்கும் என்று தெரியவில்லை! ஓய்வு பெறுகிறாரா நெய்மர்? ரசிகர்கள் அதிர்ச்சி
2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நெய்மர் ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளது கால்பந்து உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் நெய்மர்
2026 ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து தொடர் ஜூன்-ஜூலையில் நடைபெற உள்ளது.
உஸ்பெகிஸ்தான், கேப் வெர்டே, குராசோ மற்றும் ஜோர்டான் ஆகிய புதிய அணிகளுடன் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில், 34 வயதாகும் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் நெய்மர் (Neymar) அடுத்து என்ன வரப்போகிறது என்று யோசிப்பதாக கூறியுள்ளார்.

பிரேசிலிய ஒன்லைன் சேனலிடம் Caze-யிடம் பேசிய நெய்மர் ஓய்வு பெறப்போவதாக சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு பற்றி எனக்குத் தெரியாது
அவர், "இனி என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை; அடுத்த ஆண்டு பற்றி எனக்குத் தெரியாது. டிசம்பர் வரும்போது, நான் ஓய்வு பெற விரும்பலாம். நான் இப்போது ஆண்டுதோறும் வாழ்ந்து வருகிறேன்.
இந்த ஆண்டு சான்டோஸுக்கு மட்டுமல்ல, பிரேசில் தேசிய அணிக்கும் மிக முக்கியமான ஆண்டு, ஏனெனில் இது உலகக்கிண்ண ஆண்டாகும், எனக்கும் கூட. எனவே இது ஒரு பெரிய சவால்" என்றார்.

உருகுவேவுக்கு எதிரான போட்டியின்போது முழங்காலில் ஏற்பட்ட பெரிய காயத்திற்குப் பிறகு, அக்டோபர் 2023 முதல் நெய்மர் பிரேசிலுக்காக விளையாடவில்லை. 2014ஆம் ஆண்டு முதல் மூன்று உலகக்கிண்ணத் தொடர்களில் நெய்மர் விளையாடியிருக்கிறார்.
இந்த சூழலில், ஜாம்பவான் நெய்மரின் இந்த பேச்சு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலிய ஜாம்பவான் பீலேவின் அதிக கோல்கள் (77) சாதனையை நெய்மர் (79) முறியடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |