FIFA உலகக் கோப்பை: காயத்திலிருந்து மீண்டு வந்து முதல் கோலை அடித்த நெய்மர்!
காயங்கள் காரணமாக கடந்த 2 போட்டிகளில் விளையாடாமல் இருந்த நெய்மர், இன்று தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கி தனது முதல் கோலை அடித்தார்.
கத்தாரில் இன்று 974 ஸ்டேடியத்தில் நடந்த FIFA உலகக் கோப்பையின் 16-வது ஆட்டத்தில், காயங்களுக்கு பின் பிட்ச்க்குத் திரும்பிய பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், தென் கொரியாவுக்கு எதிராக தனது முதல் கோல் அடித்தார்.
இப்போட்டியில் நெய்மர் அடித்த இந்த கோல் பிரேசிளுக்கான இரண்டாவது கோல் ஆகும். முன்னதாக, ஏழாவது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் கோலடித்து கோல் கணக்கைத் தொடங்கினார்.
Twitter @PulseSportsNG
செர்பியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தனது வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால், சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூனுக்கு எதிரான பிரேசிலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது குழு-நிலை ஆட்டங்களைத் தவறவிட்டார்.
காயங்கள் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த நெய்மர், இப்போட்டியில் அணிக்கான இரண்டாவது கோலை 13-ஆவது நிமிடத்தில் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
Twitter @Goal_India
2022 FIFA உலகக் கோப்பையில் இதுவரை நெய்மர் ஆடிய 12 போட்டிகளில் இது ஏழாவது கோலாகும்.
அவர் போட்டிக்கு திரும்பியதும், அவர் ஆட்டத்தில் தனது இருப்பை முத்திரை குத்தி காட்டியுள்ளார்.