'மெஸ்ஸியை முதுகில் குத்திய நெய்மர்.,' இக்கட்டான சூழலில் PSG அணி
பாரிஸ் செயின்ட் ஜெர்மைனில் (PSG) லியோனல் மெஸ்ஸியை முதுகில் குத்தியதாக நெய்மர் மீது குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
நெய்மரின் முடிவு - மெஸ்ஸிக்கு பாதிப்பு
நெய்மரின் முடிவால் PSG அணி லியோனல் மெஸ்ஸியின் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதை மறந்துவிடக்கூடும் என்று கூறப்படுகிறது.
பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. ஏனெனில் கிளப்பில் தொடர்ந்து விளையாடுவதா இல்லையா என்ற நெய்மரின் முடிவு லியோனல் மெஸ்ஸியின் எதிர்காலத்தை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
Getty Images
நெய்மரை வேறு அணிக்கு விற்கும் PSG!
இந்த கோடையில் 50 மில்லியனுக்கும் குறைவான தொகைக்கு நெய்மரை வேறு அணிக்கு விற்க PSG அணி தயாராக உள்ளது. Chelsea அணியும் அவரை வாங்கும் ஆர்வத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், நெய்மர் 2025-ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், PSG அணியை விட்டு எந்த சூழ்நிலையிலும் வெளியேறும் எண்ணம் அவருக்கு இல்லை என்பதால் இது மெஸ்ஸிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பரிந்துரைக்கப்படுகிறது.
அதாவது, பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணியில் நெய்மர் தொடர்ந்து தங்கினால், பைனான்சியல் ஃபேர் ப்ளே விதிகளின் படி, மெஸ்ஸி அணியில் தொடர்வது நடைமுறையில் சாத்தியமற்றதாகிவிடும், அதன்காரணமாக இந்த கோடையில் மெஸ்ஸியை அணியிலிருந்து வெளியேற PSG அனுமதிக்க வேண்டும்.
sportskeeda
மெஸ்ஸியுடன் ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஆசைப்படும் PSG
PSG அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் இந்த ஜூன் 30-ஆம் திகதி காலாவதியாகிறது. ஆனால், 7 முறை பலோன் டி'ஓர் விருதை வென்ற ஜாம்பவான் மெஸ்ஸியுடன் PSG தங்கள் ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஆசைப்படுகிறது.
ஆனால், PSG அதன் அணி வீரர்களை சமநிலைப்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளதால், நெய்மருடன் அணியிலிருந்து செல்லும் வரை லியோனல் மெஸ்ஸிக்கு ஒரு புதிய ஒப்பந்தத்தை வழங்க முடியாத இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டுள்ளது.
மறுபுறம், லியோனல் மெஸ்ஸியை நெய்மர் முதுகில் குத்தியதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.