நரக வலி... ஸ்ட்ரெச்சரில் கண்ணீருடன் வெளியேறிய நெய்மர்: கடும் சிக்கலில் PSG
லில்லி கால்பந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான கணுக்கால் காயத்துடன் நெய்மர் வெளியேறியுள்ளது PSG அணிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணீருடன் வெளியேறிய நெய்மர்
ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் ஸ்ட்ரெச்சரில் கண்ணீருடன் வெளியேறிய நெய்மர் அடுத்து Bayern Munich அணிக்கு எதிராக களமிறங்குவதில் சந்தேகம் என கூறப்படுகிறது.
@AFP
கலியன் எம்பாப்பே மற்றும் நெய்மரின் அதிரடி ஆட்டத்தால் PSG அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் அந்த சம்பவம் நடந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய நிலையில் நெய்மர் தனது கணுக்காலில் காயத்தை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து களத்திலேயே அவருக்கு நீண்ட பல நிமிடங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஸ்ட்ரெச்சரும் வரவழைக்கப்பட்டது. இனி விளையாடுவது முடியாத நிலை என உணர்ந்த நெய்மர் தாமே நடந்து செல்ல முயற்சிக்க, தடுமாறிப்போன நெய்மர் உடனடியாக ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டு, வெளியேற்றப்பட்டார்.
@AP
PSG அணி நிர்வாகம் விளக்கம்
அவருக்கு பதிலாக Hugo Ekitike களமிறக்கப்பட்டார். இதனிடையே, நெய்மருக்கு எலும்பு முறிவுகள் எதுவும் ஏற்படவில்லை என PSG அணி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
ஆனால், அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் பல சோதனைகளுக்கு அவர் உட்படுத்தப்படுவார் எனவும், அதன் பின்னரே உறுதியான தகவல் தெரிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
@AFP
இதனிடையே, களத்தில் சூழ்நிலை மிக மோசமாக மாறியிருந்தது. கனேடிய நட்சத்திரம் ஜோனாதன் டேவிட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை 2-2 என சம நிலைக்கு கொண்டுவந்தார்.
ஆனால் ஆக்ரோஷத்துடன் விளையாடிய PSG அணி ஆட்டத்தை 4-3 என முடித்து வைத்துள்ளது.