கதறி அழுத நெய்மரை கட்டியணைத்து தேற்றும் மெஸ்ஸி: வைரலாகும் வீடியோ
28 ஆண்டுகளுக்கு பின்னர் கோபா அமெரிக்கா கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான பிரேசிலை எதிர்கொண்டது அர்ஜென்டினா.
தொடக்கம் முதலே பிரேசில் ஆக்ரோஷமாக ஆடி வந்தாலும், 22வது நிமிடத்தில் அர்ஜென்டினா கோல் அடித்தது.
தொடர்ந்து பிரேசில் கடுமையான போராடினாலும், அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
எனவே இறுதியில் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வென்று சாதனை படைத்தது.
மெஸ்ஸி தலைமையில் சர்வேதச அளவில் கோப்பையை வெல்வது இது முதன்முறையாகும்.
சொந்த மண்ணில் ஒரு கோல் கூட அடிக்கமுடியாத நிலையில் கவலையில் இருந்த நெய்மரை, மெஸ்ஸி கட்டியணைத்து தேற்றினார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#CopaAmérica ?
— Copa América (@CopaAmerica) July 11, 2021
¡LO LINDO DEL FÚTBOL! Emotivo abrazo entre Messi ?? y Neymar ?? ¡ÍDOLOS!
?? Argentina ? Brasil ??#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/ecknhlv2VI