பிரித்தானியா பிரதமருக்கு NHS தலைமை நிர்வாகிய அனுப்பிய எச்சரிக்கை கடிதம்! ஏன்.. ஏதற்காக?
பிரித்தானியாவில் மிக விரைவாக ஊரடங்கை எளிதாக்குதவற்கு எதிராக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தலைமை சுகாதார சேவை அதிகாரி ஒருவர் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
அடுத்த திங்கட்கிழமை தனது திட்டத்தை வகுக்கும்போது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கான இலக்கு திகதிகளை வழங்குவதாக போரிஸ் ஜான்சன் கூறினார்.
ஆனால் தொற்று விகிதங்களால் அவசியம் ஏற்பட்டால் திட்டங்களை தாமதப்படுத்த ‘தயங்க மாட்டேன்’ என குறிப்பிட்டார்.
இதற்காக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, இறப்புகள் மற்றும் தடுப்பூசி விநியோகத்தின் தாக்கம் குறித்த தரவுகளை இந்த வாரம் பிரதமர் ஆராய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவில் உள்ள NHS அறக்கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் NHS Providers-ன் தலைமை நிர்வாகி கிறிஸ் ஹாப்சனே பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், NHS குறைந்தது இன்னும் அறு வாரங்களுக்கு கடும் நெருக்கடியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளார்.
மேலும், ஊரடங்கிலிருந்து வெளியேறும் திட்டத்திற்கான அரசாங்கத்தின் அணுகுமுறையின் போது, பிரதமர் போரிஸ் ஜான்சன் திகதிகளில் மட்டுமல்ல, தரவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என கிறிஸ் ஹாப்சன் வலியுறுத்தியுள்ளார்.