'உயிர்காக்கும்' செயலியை அழிக்க தொடங்கிய பிரித்தானிய மக்கள்! விதிமுறையை மாற்றிக்கொண்ட அரசாங்கம்
பிரித்தானியாவில் NHS-ன் கோவிட்-19 செயலியை மக்கள் வெறுத்து, அழிக்கத் தொடங்கியதால், அரசாங்கம் சில விதிமுறைகளை மாறிக்கொண்டுள்ளது.
பிரித்தானியாவின் NHS கோவிட் -19 செயலியை மக்கள் பயன்படுத்துவதன் மூலமாக, நம்மைச் சுற்றி உள்ளவர்களில் யாருக்கு தொற்று உள்ளது, யார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும்.
அரசாங்கம் இந்த செயலியின் உதவியுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை எளிமையாக கண்டறிந்து, அவர்களை எச்சரித்து, தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவந்தது. இதனை 'Pingdemic' என அழைக்கப்படுகிறது.
யாரேனும் ஒருவருக்கு இன்று கோரோனா பாதிப்பு உறுதியானால், அவருடன் கடைசி 5 நாட்களுக்கு முன்பிலிருந்து தொடர்பில் இருந்த அனைவரையும் இந்த செயலியின் மூலம் கண்டறிந்து, அவர்களை சுய தனிமைபடுத்தோள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இந்த திட்டம் மக்களுக்கு பல சிக்கல்களை கொடுக்கிறது. பலருக்கும், தங்கள் சுற்றுலா திட்டம் தடைபடுகிறது, அவர்களது தினசரி பணிகள் கெடுகிறது. அவர்களுக்கு கோவிட் நெகட்டிவ் என முடிவுகள் வந்தாலும் கூட தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இதன் காரணமாக மக்கள் இந்த செயலியை தங்கள் செல்போனிலிருந்து அழிக்க தொடங்கிவிட்டனர். அப்படி அனைவரும் இந்த செயலியை தவிர்த்துவிட்டால், அரசாங்கத்தால் நாட்டின் உண்மையான கொரோனா பாதிப்பு நிலவரத்தை அறிந்துகொள்வதிலும், மக்களை கண்காணிப்பதிலும், தனிமைப்படுத்துவதிலும், நோய் தொற்றை குறைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்பதை அரசாங்கம் உணருகிறது.
இந்நிலையில், மக்கள் NHS Covid-19 செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஊக்குவிக்கும் விதமாகவும், மக்களுக்கு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ளும் விதமாகவும், முன்வந்து சில விதிமுறைகளை மாறிக்கொண்டுள்ளது.
இனி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் அதற்கு முந்தைய 2 நாட்களுக்கு முன்பு தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே சுய தனிமைப் படுத்திக்கொள்ளும்படி எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்படும். முந்தைய 5 நாட்களுக்குள் தொடர்பில் இருந்தவர்களுக்கு எந்த பிரச்சினையும் வராது.
இந்நிலையில், 'உயிர்காக்கும் செயலயாக' நம்பப்படும் NHS Covid-19 செயலியை மக்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.