"நாட்டையே உயிரோடு வைத்திருந்தோம்" 1% ஊதிய உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் NHS சுகாதார ஊழியர்கள்
சுகாதார ஊழியர்களுக்கு மிகக் குறைந்த ஊதிய உயர்வை அறிவித்ததற்கு பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக கண்டனம் வலுவடைந்துவருகிறது.
பிரித்தானியாவில் உள்ள NHS தொழிலாளர்களுக்கு 1% ஊதிய உயர்வை வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது.
இதனால், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மிகக் குறைந்த ஊதிய உயர்வை வழங்குவதற்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.
இதனால், அரசாங்கம் இந்த 1% ஊதிய உயர்வை மறுபரிசீலனை செய்யவேண்டி அழுத்தம் அதிகரித்துள்ளது.
British Medical Association மற்றும் பிற தொழிற்சங்கங்கள் தங்கள் ஊழியர்கள் கடந்த ஆண்டு நாட்டையே உண்மையில் உயிரோடு வைத்திருந்தனர் என்று கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ராயல் காலேஜ் ஆப் நர்சிங் இந்த ஊதிய உயர்வை "பரிதாபகரமானது" என்று கூறி வேலைநிறுத்த நடவடிக்கைக்குத் தயாராகத் தொடங்கியுள்ளது. மேலும், தங்களுக்கு 12.5% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது.
மேலும், United எனும் NHS-ன் மூன்றாவது பெரிய தொழிற்சங்கம், வேலை நிறுத்தம் குறித்து பரிசீலிப்பதாக எச்சரித்துள்ளது.
BMA, Royal College of Midwives, Royal College of Nursing மற்றும் Unison ஆகிய தொழிற்சங்கங்கள் பிரித்தானிய நிதி அமைச்சர் ரிஷி சுனக்கிற்கு ஊதிய உயர்வை மறுபரிசீலனை செய்யக் கோரி கூட்டு கடிதம் அனுப்பியுள்ளது.