பிரித்தானியா முழுவதும் லட்சக்கணக்கான வீடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம்! அதில் என்ன இருந்தது? வெளியான முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி போட பதிவு செய்ய அழைப்பு விடுத்து NHS லட்சக்கணக்கானோர் வீடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
56 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வாரம் கொரோனா தடுப்பூசிகளை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்படுவதாக NHS தெரிவித்துள்ளது.
56 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கான லட்சக்கணக்கான கடிதங்கள் சனிக்கிழமையன்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டன.
65-69 வயதுக்குட்பட்டவர்களில் 10 பேரில் எட்டு பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு அடுத்த கட்டமாக 56 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியா முழுவதும் 18 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், அதாவது முதியவர்கள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர்ஏற்கனவே ஒரு தடுப்பூசி பெற்றுள்ளனர்.
பிரித்தானியா முழுவதிலும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் கிட்டத்தட்ட 21.4 மில்லியன் மக்கள் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.