பிரித்தானிய பெண்ணுக்கு கிடைத்த உள்ளங்கைக்குள் அடங்கும் அளவே உள்ள பொக்கிஷம்... வாழ்வையே மாற்றவிருக்கும் அந்த பொருள் என்ன தெரியுமா?
பிரித்தானிய பெண்மணி ஒருவர் புதையல் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு கிடைத்துள்ள ஒரு பொக்கிஷம், அவரது வாழ்வையே மாற்ற உள்ளது.
இங்கிலாந்தில் வாழும் Buffy Bailey (48), ஒரு செவிலியர். அவரும் அவரது கணவரான Bailey (59)ம், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பூமியில் புதைந்துள்ள உலோகப் பொருட்களைக் கண்டுபிடிப்பது வழக்கம்.
Lancasterஇல் வாழும் Buffyயும் அவரது கணவரும் அப்படி ஒரு நாள் வடக்கு யார்க்ஷையரிலுள்ள ஓரிடத்தில் உலோகப் பொருட்கள் ஏதாவது கிடைக்கிறதா என தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது Buffy ஒரு பொருளைக் கண்டுபிடித்திருகிறார். அது, 1.5 சென்றிமீற்றர் நீளமும், 5 கிராம் எடையுமுள்ள ஒரு தங்க பைபிள்!
22 முதல் 24 காரட் தங்கத்தாலான அந்த பைபிள் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்த இடம் மன்னர் மூன்றாம் ரிச்சர்டின் வீடு இருந்த இடம் என்பதால், அது மன்னரின் உறவினர் யாருக்காவது சொந்தமான பொருளாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதே பகுதியில் முன்னொரு முறை இதே காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு தங்க நகை கிடைத்திருக்கிறது. அது 2.5 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டதால், Buffy கண்டுப்டித்த இந்த பைபிளும் பெரும்தொகைக்கு ஏலம் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், அந்த பைபிளை யார்க்ஷையரிலுள்ள அருங்காட்சியகத்துக்குக் கொண்டு சென்றபோது, இது ஒரு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு என அதை வர்ணித்த அருங்காட்சியகம், உலகின் பல பகுதிகளிலுள்ள கல்வியாளர்கள் அதைப் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அரிய பொக்கிஷத்தை தவற விட விரும்பாத அந்த அருங்காட்சியகம், அதை Buffyயிடமிருந்து வாங்குவதற்காக நிதி திரட்டுவது குறித்து திட்டமிட்டு வருகிறது.
Buffyயை ஒரே நாளில் கோடீஸ்வரியாக்கிவிட்டது அந்த தங்க பைபிள்!