தினசரி மாத்திரைகள் இனி தேவையில்லை... HIV நோயாளிகளுக்கு பிரித்தானியாவில் ஊசி மருந்து
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 6 முறை மட்டும் பெற்றுக்கொள்ளும் HIV நோய்க்கான ஊசி மருந்தை NHS வழங்க உள்ளது.
HIV நோய் முற்றாக குணமாக்க முடியாத நிலையில், அந்த கிருமியின் தாக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு, நோயாளிகள் தினசரி மாத்திரைகள் எடுத்துவருகின்றனர்.
தற்போது தினசரி மாத்திரைகளில் இருந்து விடுதலை பெறும் பொருட்டு ஊசி மருந்தை NHS வழங்க உள்ளது. antiretroviral என்ற தினசரி மாத்திரைகள் போட்டுக்கொள்வதால், கிருமிகள் ரத்தத்தில் தங்கும் என்பதுடன் மக்களிடையே பரவவோ அல்லது கண்டறிய முடியாத அளவுக்கு குறைவாகவோ இருக்கும்.
இந்த நிலையில், சுமார் 13,000 HIV நோயாளிகளுக்கு ஊசி மருந்து அளிக்க NHS முடிவு செய்துள்ளது. இதனால் குறித்த நோயாளிகளுக்கு இனி தினசரி சிகிச்சை தேவையில்லை ஆனால் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் இரண்டு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி 365 நாட்களும் சிகிச்சையில் இருக்கும் மனநிலை இனி இருக்காது என்பதுடன், ஆண்டுக்கு 6 ஊசிகள் போட்டுக்கொண்டால் போதும் என சிகிச்சை முறை மிக எளிமையாக்கப்பட்டுள்ளது.
தற்போது cabotegravir மற்றும் rilpivirine ஆகிய இரு மருந்துகளும் HIV நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதன் மொத்த கட்டணமாக 1,637.49 பவுண்டுகள் வசூலிக்கப்பட உள்ளது.
தினசரி மாத்திரைகளுக்கு செலவாகும் கட்டணத்தைவிடவும் 2 மடங்காக இருக்கும் என்றே தெரிய வந்துள்ளது. மேற்குறிப்பிட்ட இரு மருந்துகளும் ஒன்றாக கலந்து அளிக்கப்படுவதால், மருத்தின் வீரியம் அதிகமாகவே இருக்கும் என தெரியவந்துள்ளது.
NHS நிர்வாகத்தின் இந்த முடிவானது, தொண்டு நிறுவனங்களால் வரவேற்கப்பட்டுள்ளதுடன், இது பாராட்டுக்குரிய முடிவு என தெரிவித்துள்ளன.