NHS, ஊழியர்களுக்கு உயரிய பதக்கத்தை வழங்கி கவுரவித்த பிரித்தானிய மகாராணி!
பிரித்தானியாவில் 70 ஆண்டுகளுக்கு மேலான NHS-ன் பொதுச் சேவையை கவுரவிக்கும் விதமாக மாகாராணியார், உயரிய பதக்கமாக கருதப்படும் ஜார்ஜ் சிலுவையை (George Cross) வழங்கியுள்ளார்.
மேலும் என்.எச்.எஸ் (National Health Service) ஊழியர்கள் அனைவருக்கு காலன்ட்ரி பதக்கம் (Queen's Gallantry Medal) வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
NHS தொடங்கப்பட்டதில் இருந்து 73 ஆண்டுகளாகவும், குறிப்பாக இந்த கோவிட் காலகட்டத்தில் நாட்டின் முன்னணி களப்பணியாளர்களாக இருந்து, தைரியத்துடனும், இறக்கத்துடனும் மற்றும் துணிச்சலுடனும் தங்கள் சேவையை செய்த ஒவ்வொருவரையும் பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
மகாராணியார் தனது கைப்பட எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் அவர் தெரிவித்தார்.
ஜார்ஜ் கிராஸ் என்பது 'மிகப் பெரிய வீரத்தின் செயல்களுக்காக' கொடுக்கப்படும் உயரிய பதக்கமாகும். இதனை ராணியின் தந்தை ஆறாம் ஜார்ஜ் நிறுவினார்.
இது நெய்த்தானிய இராணுவத்தின் மிக உறைய விருதாக கருதப்படும் Victoria Cross -க்கு இணையானதாக கருதப்படும், பொதுமக்களுக்கான விருதாகும்.