பிரித்தானியாவில் பல குழந்தைகளின் வாழ்க்கையை புரட்டிப்போடும் மிக முக்கிய தீர்ப்பு வெளியானது!
பிரித்தானியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொடர்பாக மிக முக்கியமான தீர்ப்பு வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.
பிரித்தனையாவில் பாலின டிஸ்போரியாவால் (Gender Dysphoria) பாதிக்கப்படும் 16 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு பருவமடைதலை தடுக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.
பருவமடைதல் தடுப்பான்கள் (Puberty Blockers) பிள்ளைகளின் உடலில் ஹார்மோன்களின் வெளியீட்டை அடக்குவதன் மூலம் பருவமடைவதை "இடைநிறுத்த" பயன்படுத்தப்படும் மருந்துகளாகும்.
அதேபோல் "ஒரு நபரின் உயிரியல் பாலினம் மற்றும் அவர்களின் பாலின அடையாளம் ஆகியவற்றுக்கு இடையேயான பொருந்தாத தன்மை காரணமாக ஒரு அமைதியின்மை உணர்வு" தான் பாலின டிஸ்ஃபோரியா என அழைக்கப்படுகிறது.
கடந்த 2020 டிசம்பரில், பாலின டிஸ்போரியா கொண்ட 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 'உடனடி மற்றும் நீண்ட கால விளைவுகளை' புரிந்து கொண்டால் மட்டுமே ஹார்மோன் தடுப்பு சிகிச்சையைப் பயன்படுத்த ஒப்புக்கொள்ள முடியும் என்று பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் 13 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு சிகிச்சைக்கு ஒப்புதல் அளிப்பது 'மிகவும் சாத்தியமற்றது' என்றும், 14 அல்லது 15 வயதுடைய ஒரு குழந்தை அதன் விளைவுகளைப் புரிந்துகொள்வது 'சந்தேகம்' என்றும் கூறினர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் பிரித்தானியாவில் உள்ள ஒரே குழந்தைகள் பாலின அடையாள கிளினிக்கை நடத்தும் NHS-ன் டேவிஸ்டாக் மற்றும் போர்ட்மேன் என்ஹெச்எஸ் ஃபவுண்டேஷன் அறக்கட்டளை (Tavistock and Portman NHS Foundation Trust), இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை என்ஹெச்எஸ் அறக்கட்டளை அதன் மேல்முறையீட்டை வென்று சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த புதிய தீர்ப்பின்படி, பாலின டிஸ்போரியா கொண்ட 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெற்றோரின் அனுமதியின்றி, பருவமடைவதைத் தடுக்கும் மருந்துகளை எடுக்க முடியும்.
இந்த தீர்ப்பை டேவிஸ்டாக் அறக்கட்டளை வரவேற்றுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        