புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த நிக் மேடிசன்; டெஸ்டில் மோசமான சாதனை
nic maddinson got worst record as longer duck australia test opener: புற்றுநோயிலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய அவுஸ்திரேலிய வீரர் நிக் மேடிசன், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த நிக் மேடிசன்
அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, டர்பனில் நடைபெற்று வருகிறது.
அவுஸ்திரேலிய வீரர் நிக் மேடிசனுக்கு 2025 ஆம் ஆண்டில் விதைப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டு, அதன் பின்னர் அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சை மூலம் குணமடைந்தார்.

579 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய நிலையில், அவுஸ்திரேலிய வீரர் டெஸ்ட் போட்டிக்கு முன்பு எடுக்கும் மிக நீண்ட இடைவெளி இதுவாகும்.
இன்று தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நிக் மேடிசன், 33 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

டெஸ்டில் மோசமான சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டக் அவுட் ஆன அதிகபட்ச பந்துகள் இதுவாகும்.
மேலும், 21 ஆம் ஆண்டின் நூற்றாண்டின் டெஸ்ட் வரலாற்றில் ஒரு தொடக்க ஆட்டக்காரர் டக் அவுட் ஆன அதிகபட்ச பந்துகள் ஆகும்.

டெஸ்ட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆன தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார் நிக் மேடிசன்.
நியூசிலாந்தின்டாரின் முர்ரே 1995 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக 39 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆகி முதலிடத்திலும், ஜிம்பாப்வேன் டிரெவர் கிரிப்பர் 2000 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 26 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆகி 2வது இடத்திலும் உள்ளனர்.
1999 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 77 பந்துகளை எதிர்கொண்ட நியூசிலாந்தின் ஜெஃப் அல்லாட் டக் அவுட் ஆனதே மோசமான சாதனையாக உள்ளது.