அதிரடியாக நுழைந்து வீரர்களை தாக்க முயன்ற ரசிகர்கள்.. பிரான்ஸ் The Ligue 1-ல் பரபரப்பு! வெளியான முழு வீடியோ
The Ligue 1 கால்பந்து தொடரில் நைஸ்-மார்சேய் ஆட்டத்தின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து வீரர்களை தாக்க முயன்று வன்முறையில் ஈடுபட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
பிரான்ஸ் கால்பந்து தொடரான The Ligue 1-ல் நேற்று நைஸில் உள்ள Allianz Rivera மைதானத்தில் நடந்த போட்டியில் நைஸ்-மார்சேய் அணிகள் மோதின.
1-0 என்ற கோல் கணக்கில் நைஸ் முன்னிலையில் இருந்த நிலையில் போட்டியின் 75 நிமிடத்தில், மார்சேய் நட்சத்திர வீரர் Dimitri Payet கார்னர் கிக் அடிக்க தயாரான போது எதிர்பாராத விதமாக கூட்டத்தில் இருந்து வீசப்பட்ட பாட்டில் பின்னால் தாக்கியால் தடுமாறி கீழே விழுந்தார்.
?⚽️ | This is Payet being hit with the bottle first which kicked everything off. pic.twitter.com/2kMNhidPOz
— Football For All (@FootballlForAll) August 22, 2021
கடுப்பான Dimitri Payet, மைதானத்தில் கிடந்த பாட்டிலை எடுத்து ரசிகர்களை நோக்கி வீசினார்.
இதனால், கோபமடைந்த ரசிகர்கள் சரமாரியாக பாட்டில்களை வீசிய படி, பாதுகாவலர்களை மீறி மைதானத்திற்குள் அதிரடியாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Crazy scenes in the Ligue 1 match between Nice and Marseille.
— Alcino Broadley (@alcinobro) August 22, 2021
Payet gets hit with a bottle from the crowd while taking a corner, throws the bottle back into the stands...enraged OGC Nice fans storm the field. Watch below ?
pic.twitter.com/u3I6qGILrP
மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்கள் Dimitri Payet உட்பட மார்சேய் வீரர்களை தாக்க முயன்றுள்ளனர்.
இந்த மோசமான சம்பவத்தை தொடர்ந்து நைஸ்-மார்சேய் இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது.
ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்த வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.