அரிய நோயால் பாதிக்கப்பட்ட இளம் ரசிகன்., இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்பாப்பே
அமெரிக்காவிற்கு தனது நண்பருடன் சுற்றுப்பயணம் சென்றுள்ள PSG வீரர் கைலியின் எம்பாப்பே அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளார்.
நியூயார்க்கில் தனது விடுமுறையை கொண்டாடிவரும் PSG-ன் ஸ்ட்ரைக்கர் மற்றும் பிரெஞ்சு தேசிய அணியின் கேப்டனுமான கைலியன் எம்பாப்பே, உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு Ligue 1 தொடரில் PSG அணியுடன் லென்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாடினார். ஆனால், அப்போட்டியில் PSG அணி தோலிவியடைந்தது.
அதையடுத்து, செவ்வாய்கிழமை லியோனல் மெஸ்ஸி அணிக்கு திரும்பும்போது அவரை வரவேற்க எம்பாப்பே அங்கு காணொப்படவில்லை.
PSG-ன் முதல் தோல்விக்குப் பிறகு சில வீரர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதில் ஒருவர் கைலியின் எம்பாப்பே.
GettyImages
இந்த விடுமுறையை பயன்படுத்திக்கொண்ட எம்பாப்பே, தனது சக வீரரும் நண்பருமான அக்ரஃப் ஹக்கிமியுடன் நியூயார்க் சென்றார்.
கைலியின் எம்பாப்பே விடுமுறைக்காக சென்றாலும், அந்த பயணத்தை அவர் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். அங்கு தவிர்க்கப்படமுடியாத ரசிகர் ஒருவரை அவர் நேரில் சந்தித்துள்ளார்.
ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவனான நோவாவை அமெரிக்க மருத்துவமனைக்கே சென் சென்று சந்தித்தார். ஆனால் Kylian Mbappé இதுபோன்ற நற்செயல்களை செய்வது இது முதல் முறை அல்ல.
வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், எம்பாப்பே நோவாவை திடீரென பார்வையிட்டு கைகுலுக்கி ஆச்சரியப்படுத்தினார்.
தற்போது நியூயார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன், ஆடம்ஸ் ஆலிவர் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டுள்ளார், இது ஒரு அரிய நோயாகும்.
Un miracle Pour Noah என்ற சங்கத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட வீடியோவில், நோவாவுக்குப் பொறுப்பான மருத்துவ அமைப்பிற்கு எம்பாப்பே சில வார்த்தைகளைக் கூறினார். “வணக்கம் டாக்டர், நோவா தனது சவாலை ஏற்றுக்கொண்டார். இப்போது அது உங்களுடையது. பெரிய முத்தம் மற்றும் விரைவில் சந்திப்போம்,” என்று கூறினார்.
கைலியின் எம்பாப்பே இதுபோல பல நற்செயல்களை செய்துள்ளார். 2018-ஆம் ஆண்டைப் போலவே, கத்தாரில் நடைபெற்ற 2022 FIFA உலகக் கோப்பையிலும் தனக்கு கிடைக்கக்கூடிய அனைத்து போனஸ்களையும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
GettyImages