Break-Up ஆனதால் பிரெஞ்சு கிளப் வீரர் தற்கொலை முயற்சி! பாலத்தின் மீது ஏறி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
OGC Nice அணி வீரர் ஒருவர் பாலத்தின் மீது ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை மிரட்டல்
பிரெஞ்சு கிளப் அணியான OGC Nice-யின் வீரர் ஒருவர் Magnan பலத்தின் மீது ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த லிகு1 கிளப் உளவியல் நிபுணர், தீயணைப்பு வீரர்கள், மற்றும் பொலிஸை உடனடியாக அங்கு அனுப்பியுள்ளது.
குறித்த வீரர் A8 நெடுஞ்சாலையில் உள்ள 100 மீற்றர் உயரமுள்ள Magnan பாலத்தில் நின்று தற்கொலைக்கு மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ogcnice.com
செய்தியாளர் சந்திப்பு ரத்து
இதன் காரணமாக, பயிற்சியாளர் பிரான்செஸ்கோ ஃபரியோலி உடன் திட்டமிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பை கிளப் ரத்து செய்துள்ளது.
இதற்கிடையில், Nice-Matin கூற்றுப்படி பெயர் வெளிப்படுத்தப்படாத அந்த வீரர் Break-Up காரணமாக இவ்வாறு நடந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிகு 1 தொடரில் OGC Nice அணி புள்ளிப்பட்டியலில் 3 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |