ஒரே ஓவரில் 36 ஓட்டம் பெற்று ருத்ர தாண்டவமாடிய பூரன்!
ஒரே ஓவரில் 36 ஓட்டங்களை பெற்ற சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே ஓவரில் 36 ஓட்டம்
ஆப்கானிஸ்தான் அணியின் ஓமர்சாய் வீசிய பந்துகளில் ஒரே ஓவரில் 36 ஓட்டங்களை பூரன் பெற்றார்.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை சேர்ந்த ஸ்டூவர்ட் பிராட் பவுலிங்கில் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸ் பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.
அதுப்போலவே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 36 ரன்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஓவர்கள் முடிவில் 37 ஓட்டங்களை பெற்றது.
அதையடுத்து 4ஆவது ஓவருக்கு பூரன் - சார்லஸ் களத்திற்கு இறங்கினர். இவர்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணியின் ஓமர்சாய் பந்து வீசினார்.
முதலாவது பந்தில் நிக்கோலஸ் பூரன் அபார சிக்ஸ் அடித்து, 2 வது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது.
4வது பந்தில் நிக்கோலஸ் பூரன் அபாரமாக ஒரு பவுண்டரியை விளாசினார்.
5வது பந்தில் கவ் கார்னர் திசையில் 89 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸ் அடித்தார்.
இறுதி பந்தில் மீண்டும் சிக்ஸ் அடித்தார். இதன் மூலம் ஒரே ஓவரில் 36 ஓட்டங்களை பெற்ற நிக்கோலஸ் பூரன் சாதனை படைத்தார்.
மேலும் இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
most expensive left hander in recent times @nicholas_47 ?
— sai chowdary (@saiholicc) June 18, 2024
"Nicholas Pooran" pic.twitter.com/FJzuxsq2aa
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |