கோலி, அஸ்வினுக்கு இருக்கும் சொந்த பிரச்சனை? இந்தியா இப்போ எப்படி தவிக்குது பாருங்க... இங்கிலாந்து முன்னாள் வீரர்
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நிக்காம்டன் கோலிக்கும், அஸ்வினுக்கும் இருக்கும் பிரச்சனை குறித்து தெரிந்தால், கொஞ்சம் சொல்லுங்க என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இதுவரை மூன்று போட்டிகள் முடிந்து, நான்காவது போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
கடைசி நாளான இன்று இங்கிலாந்தின் வெற்றிக்கு 291 ஓட்டங்கள் தேவை, கைவசம் 10 விக்கெட்டுகள் உள்ளன. தற்போது மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளதால், அஸ்வின் இருந்திருந்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அருமையாக வாய்ப்பு இருக்கிறது.
Please can someone explain how Kohli obvious personal issues with Ashwin are allowed to cloud an obvious selection issue? #india
— Nick Compton (@thecompdog) September 2, 2021
ஆனால், கோலியோ அஸ்வினை இதுவரை நடைபெற்ற மூன்று மற்றும் தற்போதைய டெஸ்ட் போட்டிகளிலும் எடுக்கவில்லை. இதனால் கோலி மீது கடும் விமர்ச்சனம் எழுந்து வருகிறது.
இந்நிலையில், இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நிக் காம்டன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கோலிக்கு, அஸ்வின் மீது ஏதும் சொந்த பிரச்சனை உள்ளதா, அதன் காரணமாகத்தான் அவர் இவரை புறக்கணிக்கிறாரா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Can’t see this being anything other than a draw! India’s bowling apart from Bumrah will struggle. If only Ashwin was playing… oh Kohli it’s good to have independent thinkers in your team
— Nick Compton (@thecompdog) September 5, 2021
மேலும், தற்போது பும்ராவைத் தவிர மற்ற இந்திய பந்து வீச்சாளர்கள் போராடி தான் ஆக வேண்டும், அதுவே அஸ்வின் இருந்திருந்தால்? கோலி சிந்திப்பது நல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.