பிரபல இயக்குனர் மனைவியுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: மகன் கைது
பிரபல அமெரிக்க இயக்குநரும், நடிகருமான ஒருவர் தனது வீட்டில், தனது மனைவியுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விடயம் தொடர்பில், தம்பதியரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலமாக கண்டெடுக்கப்பட்ட தம்பதியர்
நேற்று ஞாயிற்றுக்கிழமை, அதாவது, டிசம்பர் மாதம் 14ஆம் திகதி, When Harry Met Sally முதலான பல திரைப்படங்களை இயக்கியவரும், பல திரைப்படங்களில் நடித்தவருமான ராப் ரெய்னர் (78), தனது மனைவியான மிஷெல் சிங்கர் ரெய்னருடன் (68)அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சிலுள்ள தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர்கள் இருவரும் கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
மகன் கைது
இந்நிலையில், ரெய்னர் தம்பதியரின் மகனான நிக் ரெய்னர் என்பவர் வழக்கில் முக்கிய சந்தேக நபராக சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
நிக், போதைப்பொருளுக்கு அடிமையாகி, 15 வயதிலேயே மறுவாழ்வு மையத்துக்குச் செல்லும் நிலை தனக்கு ஏற்பட்டதாகவும், அதனால், தான் வீடற்றவராக வாழும் நிலை உருவானதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நிக் கைது செய்யப்பட்டுள்ளார். விடயம் என்னவென்றால், சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன் ரெய்னர் தம்பதியர் வீட்டில் கிறிஸ்துமஸ் பார்ட்டி நடந்துள்ளது.
அன்று, அவர் தன் பெற்றோருடன் பயங்கரமாக சண்டை போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது நடத்தையால் ரெய்னர் தம்பதியர் அசௌகரியமாக உணர்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |