மெஸ்ஸிக்கு பின் வரலாறு படைத்த இளம்வீரர்! மைதானத்திலேயே அழுத தாய், தங்கை - வைரல் புகைப்படம்
UEFA தொடரில் மெஸ்ஸிக்கு பின் இளம் வயதில் கோல் அடித்த அர்ஜெண்டினா வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் நிகோ பாஸ்
UEFA சாம்பியன்ஸ் லீக்
ரியல் மாட்ரிட் (Real Madrid) மற்றும் நெப்போலி (Napoli) அணிகள் UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரின் போட்டியில் நேற்று மோதின.
இதில் ரியல் மாட்ரிட்டின் ரொட்ரிகோ (Rodrygo), ஜுட் பெல்லிங்கம் (Jude Bellingham), நிகோ பாஸ் (Nico Paz) மற்றும் ஜோசெலு (Joselu) ஆகியோர் கோல் அடிக்க நெப்போலி அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது.
Reuters/Juan Medina
இது ரியல் மாட்ரிட் அணியின் தொடர்ச்சியான 5வது வெற்றி ஆகும். இதன்மூலம் 15 புள்ளிகளுடன் அந்த அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
மெஸ்சிக்கு பின் சாதனை
இப்போட்டியில் நிகோ பாஸ் கோல் அடித்ததன் மூலம் வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார். அதாவது UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரில் மெஸ்சிக்கு பின் இளம் வயதில் கோல் அடித்த அர்ஜென்டினா வீரர் ஆனார் நிகோ.
AFP
மெஸ்சி 18 வயதில் கோல் அடித்திருந்த நிலையில் நிகோ பாஸ் 19 வயதில் கோல் அடித்துள்ளார். அதேபோல் இந்த தொடரில் கோல் அடித்த இளம் வீரராக ஸ்பெயினின் அலெஜாண்ட்ரா கர்னாச்சோ (Alejandro Garnacho) உள்ளார்.
மேலும், நிகோ பாஸ் கோல் அடித்தபோது மைதானத்தில் அமர்ந்திருந்த அவரது தாயார் மற்றும் தங்கை இருவரும் ஆனந்த கண்ணீர் சிந்தியது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |